Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் விமர்சகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில், மார்ச் 29, 2019ம் தேதி வெளியாகி இருக்கிறது 'சூப்பர் டீலக்ஸ்'. மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு 'நான் லீனியர்' படங்கள் அடுத்தடுத்து பரிச்சயமாயின. அதன்பின், வானம், நேரம், மாநகரம் ஆகிய படங்கள் வெவ்வேறு மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியாக பயணித்து, இறுதியில் ஒரே புள்ளியில் இணைவது போன்ற படங்கள் அறிமுகமாகின. இரண்டாவது வகைமையிலானதுதான், சூப்பர் டீலக்ஸ். ஐந்து கதைகள் என்பதைக் காட்டிலும் ஐந்து நிகழ்வுகள் தனித்தனியாக நிகழ்கின்றன. ஆனால், அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அவை தற்செயலானவை.   நடிகர்கள்:   விஜய் சேதுபதி சமந்தா பகத் பாசில் காயத்ரி மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் பக்ஸ் என்கிற
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று (பிப்ரவரி 2, 2018) வெளியாகி இருக்கிறது, 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. திரையரங்குகள் முன்பு, பெரிய அளவில் கட்-அவுட் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது அவருடைய ரசிகர்கள் பட்டாளம். நடிகர்கள்: விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, டேனியல், விஜி சந்திரசேகர், ராஜ்குமார், ரமேஷ் திலக் மற்றும் பலர். இசை: ஜஸ்டின் பிரபாகரன்; ஒளிப்பதிவு: ஸ்ரீசரவணன்; படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்; இயக்கம்: ஆறுமுககுமார். கதை என்ன?: ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே உள்ளது எமசிங்கபுரம். அங்கே, எமகுலம் என்ற பழங்குடியினர் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களுக்கு எமதர்மன்தான் குலதெய்வம். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் எமனிடம் வாக்கு கேட்டுவிட்டு அதன்படி நடப்பதுதான் எமசிங்கபுரத்தின் வழக்கம். அந்த ஊரின
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா