Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: திண்ணை

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா...'' என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ''தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?'' என்றார்.   ''இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு... எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ... கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்பு
திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

அரசியல், திண்ணை, முக்கிய செய்திகள்
''உஷ் அப்பாடா....இப்பவே இப்படி சுட்டெரிக்குதே... இன்னும் அக்னி நட்சத்திர சீசன்லலாம் நம்மாள பகல்ல வெளியே தலைக்காட்டக்கூட முடியாது போலருக்கு..." அடர்த்தியான தலைமுடி ஊடாக வழிந்த வியர்வையைத் துடைத்தபடி திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர். ''வெயில் மட்டுமா...? அரசியல் களமும் சூடுபிடிச்சிடுச்சே. இப்படியே கொளுத்துனா கத்திரி வெயில்ல மூளை தெறிச்சி வெளியே விழுந்துடும் போல. ஆனாலும் அதெல்லாம் மூளை இருக்கறவன் பட வேண்டிய கவல. எனக்கெதுக்கு...'' என தன்னைத்தானே எள்ளல் செய்து கொண்டார் நக்கல் நல்லசாமி.   ''சரி.... சரி... சட்டுபுட்டுனு வந்த தகவல சொல்லிட்டுப் போயிடறேன்... இன்னும் அரசியல் சேதி நிறைய எழுத வேண்டியிருக்கு. அதிமுக, திமுகவோட எந்தக் காலத்துலயும் கூட்டு வைக்க மாட்டோம். வேணும்னா பத்திரம்கூட எழுதித் தற்ரோம்னு சின்ன மாங்கா sorry... சின்ன அய்யா சொன்னாருல்ல...?'' ''ஆம
திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

அரசியல், கடலூர், சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க. பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா இருக்கும். இப்போலாம் வீடுங்கதான் பெருசு பெருசா இருக்கே தவிர திண்ணையதான் காணோம். தமிழனுங்க மனசும் சின்னதாப் போச்சுது'' என்றபடியே, சலிப்புடன் நக்கல் நல்லசாமியின் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''எங்கே நம்ம ஞானவெட்டியாரையும், பொய்யாமொழியாரையும் நாலஞ்சு நாளா ஆளையே காணோமே?'' என்றார் நக்கல் நல்லசாமி. ''ஓ...அவங்களா... ஏதோ வேலையா பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க''   ''இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?'' ''யோவ்... இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... என்ற பேனாக்காரர், அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு நமக்கு தெரியலப்பா. ஆனா, அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல ஒரு சேதி சொல்லியிருக்காங்
திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?

திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
-திண்ணை-   ''பெரியார் பல்கலைக்கழகத்துல முக்கிய பதவிகளுக்கு ஜனவரி 31, 2019ம் தேதி நடக்க இருந்த இண்டர்வியூவை திடீர்னு ஒத்திவைச்சுட்டாங்களாம். இதுக்கெல்லாம் பேனாக்காரர் பேச்சுதான் காரணம்னு பல்கலைக்கழக வட்டாரத்துல உங்கள பத்திதான் பரபரப்பா பேசிக்கிறாங்கனு,'' சொல்லியபடியே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம நக்கல் நல்லசாமி. ''யோவ் நக்கலு.... அந்த சேதிய நானும் கேள்விப்பட்டேன். அதுக்காக நம்ம பேச்சாலதான் இண்டர்வியூ நின்னுப்போச்சுனு சொல்லி நமக்கு நாமலே பெருமை பேசிக்கிடலாமா?னு,'' கேட்டுக்கொண்டே உப்பு தூக்கலாக போட்ட வறுகடலையை கொறிக்க ஆரம்பித்தார் பேனாக்காரர்.   அப்படியே நமக்கும் ரெண்டு உப்புக்கடலை கொடுங்கனு வந்து அமர்ந்தனர் பொய்யாமொழியாரும், ஞானவெட்டியாரும்.   ''சரி....இண்டர்வியூ எதுனால நின்னுப்போச்சாம்?'' ஆரம்பித்தார் ஞானவெட்டியார்.