நீயும் நானும் செம்மண்ணில் கலந்த நீர் போல…!
காதலிப்பதும்
காதலிக்கப்படுவதும்
மானுடப் பிறவிக்கு
மட்டுமேயானது. காதலில்
விழுந்தோர்க்கு வெற்றி,
தோல்வி எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் காதல் மட்டும்
தோற்பதில்லை. இப்பிறவியில்
காதல் அனுபவங்கள்
இல்லாதவர்கள், எத்தகைய
சுகபோகங்களை பெற்றவராக
இருந்தாலும் கூட,
ஒரு வகையில் குறை
உடையவர்களாகவே
கருதுகிறேன்.
காதலே தலைமை இன்பம்
என்கிறான் பாரதி.
காதலிப்போருக்கு மரணம்
பொய்யாகும்;
கவலைகள் போகும்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே! என்று
அறைகூவல் விடுக்கின்றான்.
மார்க்ஸ் - ஜென்னியின்
காதல் பேசப்பட்ட அளவுக்கு,
செல்லம்மா மீது பாரதி
கொண்ட அளப்பரிய
காதல் பேசப்படவில்லை.
நாமும் இப்போது
பாரதியைப் பற்றி பேச
வரவில்லை.
'இலக்கியம் பேசுவோம்'
பகுதியில் மீண்டும்
சங்க இலக்கியமான
குறுந்தொகையில் இருந்து
இன்னொரு காதல் பாடலைப்
பற்றி பேசுவோ...