
”பெண்களின் இடுப்பு ‘பேரல்’ போல் ஆகிவிட்டது!” திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு!
திமுக பேச்சாளரும்,
பட்டிமன்ற நடுவருமான
திண்டுக்கல் லியோனி,
"ஒரு காலத்தில் பெண்களின்
இடுப்பு எட்டு போல் இருந்தது;
இப்போது பேரல் போல்
ஆகிவிட்டது,'' என்று பேசியது
அரசியல் அரங்கில் சர்ச்சையை
கிளப்பியிருக்கிறது.
கோவை தொண்டாமுத்தூர்
சட்டப்பேரவை தொகுதியில்
திமுக சார்பில் கார்த்திகேய
சிவசேனாபதி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து திமுக
பேச்சாளர் திண்டுக்கல் லியோனி,
மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர்
பகுதியில் பரப்புரையில்
ஈடுபட்டார்.
பரப்புரையின்போது அவர்,
''வெளிநாட்டு மாடுகளின்
பாலைக் குடித்து குடித்து
நம் ஊர் பெண்களும், குழந்தைகளும்
பலூன் போல ஊதிவிட்டனர்.
ஒரு காலத்தில், பெண்களின்
இடுப்பு எட்டு போல் இருந்தது.
குழந்தையைத் தூக்கி இடுப்பில்
வைத்தால் கச்சிதமாக
அமர்ந்து கொள்ளும்.
ஆனால், இப்போது
பெண்களின் இடுப்பு,
பேரல் போல ஆகிவிட்டது.
குழந்தை...