Thursday, April 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ஆளுநர்

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். அவரை அந்தப் பணியில் நியமனம் செய்வதற்காக பல்கலை துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.   கடந்த 3ம் தேதி சுரேஷ் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி துணை வேந்தரிடம் லஞ்சப்பணத்தைக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். லஞ்சம் வாங்கிய துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கணபதியின் லஞ்ச பேரத்திற்கு உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் கைது செய்தனர். கணபதி, சிறையில் அடைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் பணியிடை நீக்கம் செய...
ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் அந்தரங்க தகவல்களைத் தெரிந்து கொள்வதில் வெகுசன மக்களுக்கு என்றுமே ஓர் அலாதி தேடல் இருந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட நிலையில்கூட இன்றைக்கும் அவரைப்பற்றிய ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் வெளிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஜெ.ஜெயலலிதா. எப்போதும் பரபரப்பு அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக்குறைவால் மறைந்தார். அரசியலிலும் சினிமாவிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ''ஜெயலலிதா: மனமும் மாயையும்'' என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதி இருக்கிறார். அந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நூலாசிரியர் வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றி பல ஆண்டுகளாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை படைத்திருக்கிறார். அரசியல் மற்றும் வ...
சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தும், முதன்முதலில் எம்எல்ஏவாக பேரவைக்குள் காலடி வைத்த டிடிவி தினகரனை பாராட்டியும் ட்விட்டரில் பலர் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித். அவர் உரையாற்றும் முதல் கூட்டத்தொடர் இது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி முதன்முதலில் இடைத்தேர்தலைச் சந்தித்தது. அதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏ ஆக காலடி வைக்கும் முதல் கூட்டத்தொடர். மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்த டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, மக்கள் பிரதிநிதியாக அவர் இப்போது சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார். ...
தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

தமிழக அரசு ஆஹா…ஓஹோ…!; ஆளுநர் உரையில் பாராட்டு; முழு விவரம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் தனது உரையை வாசித்தார். முன்னதாக அவர், 'அனைவருக்கும் வணக்கம்' என்று தமிழில் கூறினார். இடையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும், 'உட்காருங்க' என்று தமிழில் பேசினார். தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பினும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டினார். ஆளுநர் உரையின் முழு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக...
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர...
ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி...
முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

அரசியல், கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து வரும் ஆளுநரின் ஆய்வுப்பணிகளுக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின பட்டமளிப்பு விழாவிற்காகக் கோயம்புத்தூருக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கியதோடு ராஜ்பவனுக்கு திரும்பி இருக்கலாம். என்ன நினைத்தாரோ, திடீரென்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு என்ற பெயரில் கோதாவில் குதித்தார். பாஜகவை சும்மாவே தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?. அக்கட்சியை கடும் விமர்சனங்களால் பிராண்டி எடுத்து வருகிறார்கள். 'தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் ஆய்வு செய்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை' என்று பாஜக ...
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ...
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப். 22ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக உடைந்தது. தமிழக ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் ஆட்சியும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வ...