Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சினிமா

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், 'குலேபகாவலி'. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது. நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண். கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படை...
நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!:  மலேசியாவில் ரஜினி பேச்சு

நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!: மலேசியாவில் ரஜினி பேச்சு

அரசியல், இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டால் நமக்கு எல்லாமே கிடைக்கும் என்று மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நேற்று (ஜனவரி 6, 2017) நட்சத்திரக் கலை விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நடிகர் விவேக், ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விவேக் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் மிக இயல்பாகவும், ஜாலியாகவும் பதில் அளித்தார். எனினும், அவர் கேட்கத் தொடங்குவதற்கு முன்பே, ரொம்ப கடினமான கேள்விகளைத் தவிர்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். விவேக் கேள்விகளும் ரஜினியின் பதில்களும்.... பைரவி டு இந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி? என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல க...
களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அய்ங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிப்பில் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் ஒருவழியாக இன்று (டிசம்பர் 29, 2017) வெளியாகி இருக்கிறது 'களவாடிய பொழுதுகள்'. நடிப்பு: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா, இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன், சிறுமி ஜோஷிகா மற்றும் பலர்; இசை: பரத்வாஜ்; இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: தங்கர் பச்சான். கதைக்கரு: உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்கள் சூழ்நிலை காரணமாக பிரிய நேரிடுகிறது. காதலன் வேறு பெண்ணையும், காதலி வேறு ஆணையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். எதிர்பாராத விதமாக முன்னாள் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களே களவாடிய பொழுதுகள் படத்தின் மையக்கதை. களவாடிய பொழுதுகள் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் கடந்த 2010ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. எனினும், பல தடைகளைத் தாண்டி ஏழு ஆண்...
வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

சினிமா, முக்கிய செய்திகள்
'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 22, 2017) வெளியாகி இருக்கிறது, 'வேலைக்காரன்'. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, சார்லி, விஜய் வசந்த், 'ரோபோ' சங்கர், சதீஷ், 'மைம்' கோபி, 'ஆர்.ஜே.' பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோஹித்ஸ்வா மற்றும் பலர். இசை; அனிருத்; ஒளிப்பதிவு: ராம்ஜி; கலை: முத்துராஜ்; தயாரிப்பு: 24 ஏஎம் ஸ்டூடியோஸ்; இயக்கம்: மோகன் ராஜா. கதை என்ன?: வேலைக்காரர்கள், அந்தந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிலும், பொருள்களை வாங்கும் நுகர்வோருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், லாபவெறி கொண்டு அலையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்ணும் உணவுப்பொருள்களை எப்படி தயாரிக்கின்றன? அதை வணிகப்படுத்த என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் நேர்த்தியான திரை க்கதையுடன...
அருவி – சினிமா விமர்சனம்; “போலி சமூகத்தின் மீதான சாட்டையடி!”

அருவி – சினிமா விமர்சனம்; “போலி சமூகத்தின் மீதான சாட்டையடி!”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சர்வதேச படவிழாக்களில் ஏற்கனவே பெரும் கவனத்தை பெற்ற 'அருவி', நேற்று (டிசம்பர் 15, 2017) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. விருது படம் என்றாலே மெதுவாக நகரக்கூடியது, குறிப்பிட்ட சாராரைப் பற்றியது போன்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து, இந்த சமுதாயத்தில் இருக்கும் நம் ஒவ்வொருவரின் குண இயல்புகளை பல்வேறு பாத்திரங்களின் வழியாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது அருவி. நடிப்பு: அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சுவாமி, கவிதா பாரதி மற்றும் பலர். இசை: பிந்து மாலினி - வேதாந்த் பரத்வாஜ்; ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்; படத்தொகுப்பு: ரேமாண்ட் டெர்ரிக்; தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ்; இயக்கம்: அருண்பிரபு புருஷோத்தமன். கதை என்ன?: அருவி என்பது இந்தப்படத்தில் மையப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ஒரு பெண்ணின் பெயர். தமிழகத்தின் அழகான ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அருவியின் குடும்பம், அவளுடைய...
சத்யா – சினிமா விமர்சனம்

சத்யா – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காணாமல் போன பெண் குழந்தையை மீட்க போராடும் இளைஞன் சந்திக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், சிக்கல்களும்தான் சத்யா படத்தின் ஒன்லைன். நடிகர்கள்: சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஸ், 'யோகி' பாபு, 'நிழல்கள்' ரவி; இசை: சைமன் கே கிங்; ஒளிப்பதிவு: அருண்மணி பழனி; எடிட்டிங்: கவுதம் ரவிச்சந்திரன்; தயாரிப்பு: நாதாம்பாள் பிலிம் பேக்டரி; இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. நாயகன் சத்யா (சிபிராஜ்) ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருடன் யோகி பாபுவும் பணியாற்றுகிறார். திடீரென்று ஒருநாள் சிபிராஜிக்கு அவருடைய முன்னாள் காதலியான ரம்யா நம்பீசனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. சிபிராஜிடம் ரம்யா நம்பீசன் அவசரமாக ஓர் உதவி கேட்க, நாயகனும் இந்தியா திரும்புகிறார். தன் நான்கு வயது பெண் குழந்தை காணவில்லை என்றும், அவளை கண்டுபிடித்து தர வேண்டும...
கொடிவீரன் – சினிமா விமர்சனம்

கொடிவீரன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குட்டிப்புலி, கொம்பன், மருது வரிசையில் இயக்குநர் முத்தையாவின் டெம்பிளேட்டில் தடம் மாறாமல் இன்று (டிசம்பர் 8, 2017) வெளியாகி இருக்கிறது கொடிவீரன். குட்டிப்புலி படத்தில் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தையும், கொம்பன் படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்குமான பாசத்தையும், மருது படத்தில் பேரனுக்கும், பாட்டிக்குமான பாசத்தையும் சொன்ன முத்தையா, கொடிவீரன் படத்தில் அண்ணன்&தங்கை பாசத்தை பந்தி வைத்திருக்கிறார். ஒரு ஊர். மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த அண்ணன்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. தங்களது தங்கைகளு க்காக எதையும் செய்யத் துணியும் அண்ணன்கள்; அவர்களுக்காக எதையும் சகித்துக்கொண்டு பாச மழை பொழியும் தங்கைகள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் அன்பு, காதல், துயரம், துரோகம் ஆகியவற்றை ரத்தம் சொட்டச்சொட்ட சொல்கிறது கொடிவீரன். நடிகர்கள்: சசிக்குமார், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பசுபத...
‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
'இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்' என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, 'திருட்டுப்பயலே-2' படம். நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை...
தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று – சினிமா விமர்சனம்

சினிமா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, புதிய கதைக்களத்துடன் வந்திருக்கும் படம்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று'. தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபடும், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தண்ணீ காட்டி வரும் ஒரு கும்பலை வேட்டையாடுவதுதான் படத்தின் ஒன் லைன். நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரீத் சிங், 'போஸ்' வெங்கட், அபிமன்யூ சிங், மனோபாலா, சத்யன் மற்றும் பலர். இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - சத்யன் சூரியன். தயாரிப்பு - ட்ரீம் வாரியர்ஸ். இயக்கம் - ஹெச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்று (நவம்பர் 17, 2017) வெளியாகி இருக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'. தொடர் குற்றத்தில் ஈடுபடும் ஒரு கும்பலை, ஒரு காவல்துறை அதிகாரி எப்படி பிடிக்கிறார்?, அதற்காக அவர் சந்திக்கும் இழப்புகள், சறுக்கல்கள், முயற்சிகள் என்னென்ன என்பதை ஆக்ஷன் திரில்லர் கலந்து பரபரப்...
ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை 'மியூட்' செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'பரதேசி', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை' என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா - பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது. நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர்சனப...