Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

வர்த்தகம்

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த நான்கு நாள்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. ஐடி, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்க ஆரம்பித்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு நாள்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் (நவ. 22) இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் லேசான சரிவுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் சந்தைகள் மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%) அதிகரித்து, 58664.33 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%) அதிகரித்து, 17503.30 ப...
பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
முதலீட்டாளர்களிடையே பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியீடு திங்கள்கிழமை (நவ. 8) தொடங்கியது. டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதிச்சேவை வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம், வணிக விரிவாக்கத்திற்காக பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18300 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரும் பொதுப்பங்கு வெளியீடாக பேடிஎம் ஐபிஓ கருதப்படுகிறது. கடைசியாக, கடந்த 2010ம் ஆண்டு கோல் இந்தியா ஐபிஓ மூலம் 15475 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே பெரிய ஐபிஓ ஆக இருந்தது. மோர்கன் ஸ்டேன்லி இண்டியா, கோல்டுமேன் சாக்ஸ் (இண்டியா) செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜேபி மோர்கன் இண்டியா, சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இண்டியா, ஹெச்டிஎப்சி வங...
ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப்பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் இன்று (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன. இந்நிறுவனம், வியாபார விரிவாக்கத்திற்காக பொதுப்பங்குகள் வெளியீடு மூலம் 9375 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 14 - 16ம் தேதி வரை ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கிறது. ஒரு பங்கின் விலை 74 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் கடந்த நிதி ஆண்டு கணிசமாக லாபம் ஈட்டி இருந்தது. எனினும், அந்நிறுவனத்துக்கு கடன் சுமையும் இருந்து வருகிறது. இதனால் பொதுப்பங்கு எந்தளவுக்கு வெற்றி பெறும் என்ற தடுமாற்றமான நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில் சொம...
சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
சொமேட்டோ நிறுவன புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த இலக்கை விட கூடுதல் பங்குகளுக்கு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. முன்னணி ஆன்லைன் உணவு வர்த்தக நிறுவனமான சொமேட்டோ, ஐபிஓ எனப்படும் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு புதன்கிழமை (ஜூலை 14) தொடங்கியது. இதன்மூலம் 9375 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் வெளியான ஐபிஓக்களில் சொமேட்டோவின் பங்கு வெளியீடுதான் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 71 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 522 பங்குகளை விற்க முடிவு செய்திருந்த நிலையில், முதல் நாளிலேயே 75 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்த பங்குகளில் இன்ஸ்டிடியூஷனல் அல்லாத முதலீ...
தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!

தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
தங்க நகைகளுக்கு ஜூன் 16 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் இல்லை என ஜூவல்லரி நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை எழவே முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.   இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ஆகஸ்ட் மாதம் வரை எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். 256 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் விற்பனை இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ச், பேனா உள்ளிட்டவற்றுக்கும், குந்தன் உள்ளிட்ட சில ஆபரணங்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், ஹால்மார்க் முத்திரை ...
பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் திங்கள்கிழமை (ஏப். 12) இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி, திங்கள் கிழமை (ஏப். 12) காலை 14644.65 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 14652.50 புள்ளிகளுக்குச் சென்றது. குறைந்தபட்சமாக 14283.55 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பங்குகளில் வெறும் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே முந்தைய வர்த்தக தினத்தை விட சற்று ஏற்றம் கண்டிருந்தன. 46 நிறுவனப...
கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மார்ச் 24) ஒரே நாளில் 3.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.   பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு, புதன்கிழமை காலை முதலே கொரோனா இரண்டாவது அலையால் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவியது.   இதனால் முன்னெச்சரிக்கையாக பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு கையிருப்பில் இருந்த பங்குகளை விற்கக் தொடங்கினர். அதாவது, நிமிடத்திற்கு 860 கோடி ரூபாய் என்ற கணக்கில் பங்குகளை விற்றுத் தள்ளினர்.   சில்லரை முதலீட்டாளர்களிடையே காணப்பட்ட அச்சம், மும்பையின் தலால் தெருவில் இருக்கும் அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களிடமும் காணப்பட்டது.   மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 871.13 புள்ளிகள...
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பிரபல தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 6.12 லட்சம் கோடிகளுக்கு மேல் இருப்பதாக, ஹூரூன் ஆய்வேடு, மார்ச் 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.   இப்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் மொத்தம் 209 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 177 பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் மற்றவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் என்றும் ஹூரூன் ஆய்வேடு கூறுகிறது.   உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலின் பத்தாவது பதிப்பை பிரபல வணிக இதழான ஹூரூன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) அன்று வெளியிட்டது. அதில்தான் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.   உலகம் முழுவதும் மொத்தம் 3228 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 68 ந...
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை 803ல் இருந்து 828 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.   அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உர...
ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு வெற்றியடைந்துள்ளது. பொதுப்பங்குகள் வேண்டி சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வெள்ளிக்கிழமை (பிப். 26) இந்நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. ரயில்வே துறையின் ஓர் அங்கமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், ஒரு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குநர் ஆகும். இத்துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது.   இந்நிறுவனம், 819.24 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதன்முதலாக பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. மினிமம் லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும். ஒரு பங்கின் விலை 94 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.  ...