Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: தொண்டையில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (16/07/17) அதிகாலை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி திடீரென்று அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேர ஓய்வுக்கு பின் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். ராசாத்தி , கனிமொழி, தமிழரசு மற்றும் செல...
சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள், வெற்றி பிறந்த கதை
-வெற்றி பிறந்த கதை-   சேலத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவர்... சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என வெகு சிலரையே சொல்ல முடியும். அந்தப்பட்டியலில் டி.ஜே.ராஜேந்திரன், தவிர்க்க முடியாத ஆளுமை.   மிகச்சமீபத்தில், பழனியில் வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு, மண்டபம் கட்டிக்கொடுத்து, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த அருளாளர். கல்வி உதவி கேட்டு செல்லும் ஏழைகளுக்காக இவருடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றால் மிகை இல்லை.   தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி கட்டடங்களை தனது 'விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்', விஜயஸ்ரீ பில்டர்ஸ், விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனங்களின் மூலம் கட்டிக்கொடுத்து, சேலத்தின் பெயரை பறைசாற்றி வருகிறார். உழைப்பால் உயர்ந்த டி.ஜே.ராஜேந்திரன் அவர்களை, 'வெற்றி பிறந்த கதை' பகுதிக்காக அவருடைய அலுவலகத்தில் ...
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &...
இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

முக்கிய செய்திகள், விளையாட்டு
சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 3-0 கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலியின் தலைமைக்கு கிடைத்தை மிகச்சிறந்த வெற்றி இதுவாகும்.   இந்த தொடரில் இந்தியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி இலங்கையை துவம்சம் செய்ய சில முக்கிய காரணங்கள் உள்ளன. பெரிதாக கஷ்டப்படாமலேயே இந்தியா இந்த இமாலய வெற்றிகளை ருசித்துள்ளது. அதிலும் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வெளிநாட்டு தொடர் ஒன்றில் அது வொய்ட்வாஷ் செய்தது இதுதான் முதல் முறை என்ற சாதனை மகுடத்தை கேப்டன் விராட் கோஹ்லி சூடிக்கொள்ள சில வீரர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவில் சிறு தொடரை ஆடி முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்ககா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு இந்த வெற்றி கண்டிப்பாக பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பலாம். 3வது டெஸ்...
பிட்காயின்-இல் முதலீடு செய்வது சரியா..?  ஆபத்து என்னென்ன..?

பிட்காயின்-இல் முதலீடு செய்வது சரியா..? ஆபத்து என்னென்ன..?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பிட்காயின் என்பது டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து பராமரிக்கப்படும் நாணயம் ஆகும். சில நாட்களாகவே செய்திகளில் இடம்பெற்று வரும் இந்த ரகசிய குறியீட்டைக் கொண்ட நாணயமானது, மிகக் குறுகிய வருங்காலத்தில் ஏதேனும் ஒரு வழியில் லாபத்தைப் பெற்று நாணய மதிப்பீட்டை உயர்த்தும் நோக்கில் தங்களிடம் உள்ள உபரிப் பணத்தைத் தாராளமாகச் செலவிடத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிட்காயின்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் சட்டப்பூர்வமாக்குவதை நோக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் அதிகக் கவனத்தை அதன் மீது குவிக்கிறது. இந்த நாணயத்தை மிக அதிக அளவில் அச்சிட முடியாது என்று டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குபவர்களால் சொல்லப்படுவதால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையேயான அதிக இடைவெளியால் டிஜிட்டல் நாணயத்தின் விலை அதி விரைவாக முன்நோக்கி உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம். முதலீட்ட...
120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

சினிமா, முக்கிய செய்திகள்
வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அஜித்தின் 'விவேகம்'. ஆனால் அதற்குள்ளாகவே இப்படம் ரூ.120 வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில், இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.54.5 கோடிக்கு சென்றுள்ளது.
மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

அரசியல், முக்கிய செய்திகள்
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று (ஆக.,14) சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஓபிஎஸ் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளதால் ஓரிரு நாள்களில் இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என தெரிகிறது....
கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!

கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது!

முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லகெலே: இலங்கை-இந்தியா இடையிலான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரங்களில் சுருண்டது. இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108 ரன்கள் விளாசினர். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் சேர்த்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4, அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்காரணமாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கினார். எனவே, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்ன...
காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றினாரா பிக்பாஸ்?

காயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றினாரா பிக்பாஸ்?

முக்கிய செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரிக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி மீதான டிஆர்பி வெகுவாக குறைந்ததாகச் சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு ஜூலியானா வெளியேற்றப்பட்டதும் ரசிகர்கள் குறைந்ததற்கு இன்னொரு காரணம். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், காயத்ரி மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னார். அந்த டாஸ்க்கில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை எவிக்ஷன் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்த வாரம் பார்வையாளர்கள் தரப்பில் இருந்து சக்தி, காயத்ரி ஆகியோருக்குதான் மிகக்குறைந்த வாக்குகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிண்டு ம...
கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
உத்தர பிரதேசத்தில், அரசு மருத்துவர் ஒருவரின் மனிதநேயமிக்க முயற்சியால் பல குழந்தைகளின் உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. கோரக்பூர். பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மூளைவீக்க நோயால் 60 குழந்தைகள் இறந்தது இங்கேதான். குழந்தை நல மருத்துவர் ஒருவர் மூளைவீக்க சிகிச்சைப் பிரிவின் தலைவருமாக இருக்கிறார். 10ஆம் தேதி இரவு. ஆக்சிஜன் குறைபாட்டால் அபாய எச்சரிக்கை பீப் சத்தம் ஒலிக்கிறது. அவசர கால சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் இது இரண்டு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதற்குப் பிறகு? மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றித் தேவை, அதுதான் அவர்களின் உயிர்காக்கும் மருந்து. இதுவும் அந்த மருத்துவருக்கு நன்றாகத் தெரியும். ஆக்...