Monday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அரியலூர், கல்வி, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்பு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை. தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி ...
பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கருப்பு பணம் - ஊழல் ஒழிப்பு கோஷங்களை, தேர்தல் சுலோகமாக பயன்படுத்தி, அரியணையேறிய மோடி உள்ளிட்ட காவி கும்பலின், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி, அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் இனி செல்லாது என்று ஓர் அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். இந்திய தேசத்தின் மீது இந்திய அரசாங்கமே நடத்தியிராத மிகப்பெரும் தாக்குதல் அது. மோடியின் பாணியில் சொல்வதென்றால் சொந்த நாட்டினர் மீதான 'சர்ஜிகல் ஸ்டிரைக்'. இந்த அறிவிப்பினால் சாமானியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்களையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளித்து வைத்திருக்கும் 1000, 500 பணத்தாள்களை உடனடியாக மாற்றியாக வேண்டுமே. அவர்களின் கவலை அவர்களுக்கு. அடுத்த நாளே வங்கிகளில் தங்களிடம் உள்ள உயர்மதிப்பு பணத்தாள்களை டெபாசிட்...
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வாகனங்களில் செல்லும்போது அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அது தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, வாகன ஓட்டுநர்கள் உரிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், சீருடை அணிந்த காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும்போது, அசல் உரிமத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் (பிரிவு 130) என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி (இன்று) முதல் அனைத்து வகை வாகன ஓட்டிகளும், வாகன பயணத்தின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவ்வாறு அசல் உரிமம் இல்லாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இவை இரண்டு சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே ...
டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

டோனி ‘நாட்- அவுட்’ சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி, ஒரு நாள் போட்டிகளில் 73 முறை அவுட் ஆகாமல் இருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுவிட்ட டோனி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. இது, டோனிக்கு 300வது ஒரு நாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் டோனி, அவுட் ஆகாமல் 49 ரன்கள் எடுத்தார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் 100வது அரை சதம் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், 50 ஓவர்களும் முடிந்து விட்டன. எனினும், அவர் மற்றொரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி...
கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா

கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றுள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரையும் ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினர். 4 ரன்களில் ஷிகர் தவான் அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் இந்த போட்டியில் 29வது சதத்தை பூ...
மத்திய அமைச்சரவையில் அதிமுக?

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆபரேஷன் தமிழ்நாட்டின் அடுத்த நகர்வாக, அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் படலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கால் பதிப்பதுதான் பாஜகவின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்படும் கேரளாவில்கூட பரவலாக காவி நிறம் தென்படத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலோ காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவ அரசியல் இருந்து வருகிறது. ஆந்திராவில் காலூன்ற வசதியாக, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது. தென்னிந்தியாவில் பாஜகவினர் நுழைய முடியாத எஃகு கோட்டை என்றால் இன்னமும் அது, தமிழ்நாடு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழ...
ஒழுகும் பேருந்துகள்; கிழிக்கும் தகடுகள்!

ஒழுகும் பேருந்துகள்; கிழிக்கும் தகடுகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள், வேலூர்
தமிழக அரசுப்பேருந்துகள், மழைக்காலங்களில் கிட்டத்தட்ட நடமாடும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாறி விடுகின்றன. மழையில் நனைந்தும், கிழிக்கும் தகடுகளுடனும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் அவல நிலை தொடர்கிறது. தமிழகத்தில் தனியார் வசமிருந்த போக்குவரத்து சேவை, 1972ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது. இப்போது 8 கோட்டங்கள், 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2016-17 கணக்கெடுப்பின்படி, 23078 பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் நம்பி இருக்கும் ஒரே பொதுப் போக்குவரத்து சாதனம், அரசுப் பேருந்துகள்தான். எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூல், சராசரி வேகத்திற்கு மேல் செல்லாதது, தனியார் பேருந்துகளில் உள்ளதுபோல் டிவி, ரேடியோ மற்றும் சுத்தமான இருக்கை வச...
கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கண்ணு போச்சு; மாரடைப்பு வந்துச்சு; தீர்வுதான் கிடைக்கல! அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கண்ணில் பார்வை பறிபோயும், மாரடைப்பில் பாதி உயிரை இழந்தும் தவித்து வருகிறார் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருவர். வெறும் 1500 பென்ஷனுக்காக ஆண்டுக்கணக்கில் முதியவரை அலைக்கழிக்கும் அவலம் சேலத்தில் நடந்து வருகிறது. ஊழல் செல்லரித்துப்போன அரசு அதிகாரிகளால், நொந்து நூலான சாதாரண சத்துணவு ஊழியரின் கதை இது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இச்சம்பவம் ஒரு சான்று. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). பனமரத்துப்பட்டி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். சக ஊழியர் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களில் சத்துணவு ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நிதி திரட்டி, பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தம்மந...
பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான். ஆனால், தாமத...
ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின...