Monday, December 1மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

அரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.  “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ...
உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப்படிப்பில் சேர 'நீட்' தேர்வு ஒன்றே வழி சமூகத்தில் உயர் அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப்படும் மருத்துவர்களை சாலையில் இறக்கி தவிக்க விட்டுள்ளது, ஒரு தீர்ப்பு. கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் சேர, இதுவரை வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை ஒரே தீர்ப்பில் ரத்து செய்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். மருத்துவப்படிப்பில் சேர 'நீட்' தேர்வு ஒன்றே வழி, என்ற நடுவண் அரசின் தாக்குதலில் இருந்தே மீளாத தமிழகத்திற்கு, மற்றொரு சம்மட்டி அடிதான் இந்த தீர்ப்பு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், நீட் தேர்வு உத்தரவும் மருத்துவர்களை இனி கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கியே உந்தித்தள்ளும் என்ற கவலையையும் அச்சத்தையும் அரசு மருத்துவர்களிடம் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது. பிரச்னையின் அடிநாதம் இதுதான். தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவரும் கிராமப்புற ஆர...
அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அலோபதி, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர் ஆர். கனகராஜ். "அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். இந்த நிலையில் அவர், ஏதோ ஒரு அழகு நிலையத்திற்குச் சென்று, கைகளில் செயற்க...
வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

அலோபதி, சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை' தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்... ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய 'மெலனின்'...