Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கவிஞர் சினேகன் மீது தமிழார்வலர்கள் கொதிப்பு

கவிஞர் சினேகன் மீது தமிழார்வலர்கள் கொதிப்பு

முக்கிய செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது யார் என்றுகூட தெரியாமல் இருக்கும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது தமிழார்வர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு கவிஞர் சினேகன்,'தாயுமானவர்' என பதில் அளித்தார். உண்மையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது, பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. 'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...' என்று ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். வந்திருக்கிறோம். ஆனால், அந்தப்பாடலை எழுதியது யார் என்று தெரியாமல்தான் பலரும் இருக்கிறோம். தமிழுக்கு நேர்ந்த இன்னொரு கொடுமை, இது. இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 4ம் தேதி, போட்டியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடினர். அப்போது கவிஞர் சினேகன் சக போட்டியாளரான ஜூலியானாவிடம் இந்தப் பாடலை எழுதியது யார்? என்று கேட...
மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதார், ரேஷன் மானியம் ரத்து என் பாஜக அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். பாகிஸ்தான் ஊடுருவலை முறியடிக்க இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறதோ இல்லையோ, சொந்த நாட்டினர் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை விதித்தது. இதனால் நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு. இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி, ...
கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது

கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இன்று (12/07/17) அளித்த பேட்டி: கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஓஎன்ஜிசியால் எந்த பாதிப்பும் கிடையாது. அங்கு தொடர்ந்து செயல்படும். எண்ணெய் வளம் உள்ள இடங்களில் கிணறு அமைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் தொடர்ந்து எடுக்கப்படும். மக்களின் அச்சத்தை போக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு கிடையாது. ஓஎன்ஜிசி மக்களுக்காக செயல்படும் நிறுவனம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்....
பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி:  நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி: நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று (11/08/17) சந்தித்தார். அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பினார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் இந்த அறிவிப்பால் தினகரன் அணி கடும் கொதிப்படைந்து உள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்போம் என்று தினகரன் அணியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பழனிச்சாமி பின்னர் நாடாளுமனற் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். இச்ச...
தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா?  மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்...
பள்ளிக் கல்வித்துறை செயலர் இடமாற்றம் தடை:  ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை செயலர் இடமாற்றம் தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முக்கிய செய்திகள்
சென்னை: பள்ளி கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. பள்ளிக்கல்வி துறையில் சமீபத்தில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு காரணமானவராக திகழ்ந்தவர் உதயச்சந்திரன். இதில் 10 ம்வகுப்பு, பிளஸ் டூ தேர்வு ஆகியவற்றில் முதல் 3 இடங்கள் அறிவிப்பு வராது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ம் வகுப்பு பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுநல வழக்கு: இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இவரை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட் இவரையும், புதிய பாடத்திட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள ...
இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

சேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட...
அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அலுவல் மொழி சட்டமும் அத்துமீறும் அரசாங்கமும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-பிந்துசாரன், சமூக செயற்பாட்டாளர்-   1950 -ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் எனத் தெரிவிக்கின்றது.   இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் எனவும், பிறகு 1965ம் ஆண்டு முதல் ஆங்கிலம் ஆட்சிமொழி என்னும் நிலையை தானாக இழக்கும் எனவும் அறிவிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசின் இந்தி மொழித்திணிப்பை எதிர்த்து, தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிர் ஈந்தனர்.   அதன் விளைவாக அலுவல் மொழிச்சட்டத்தில், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்படும் எனத்திருத்தம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ஒன்றியத்தில் இருந்து, இந்தி மொழி அல்லாத பிறமொழ...
இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்!  ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்! ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

கோயம்பத்தூர், முக்கிய செய்திகள்
"இந்த சமுதாயம்தான் நமக்கு எல்லாமே கொடுத்தது; கொடுத்து வருகிறது. நாமும் அதற்குரிய நன்றிக்கடனைச் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்காகவே, இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சொந்த செலவில் நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம்," என்று தீர்க்கமாக பேசுகிறார் மோகன்ராஜா. கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜா (37). இயற்கை மீதான நேசத்தின் வெளிப்பாடாக, 'காமதேனு' விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை'யை நிறுவி, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறார். அவருடனான உரையாடலில் இருந்து... "நாட்டுப் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் நம்மை அண்டாமல் தடுக்க, இயற்கை நமக்கு அளித்த கொடைதான் நாட்டு மாட்டினங்களும் அவை தரும...
திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள், வரலாறு
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது.   இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலா...