Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப்பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் இன்று (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன.

இந்நிறுவனம்,
வியாபார விரிவாக்கத்திற்காக
பொதுப்பங்குகள் வெளியீடு
மூலம் 9375 கோடி ரூபாய்
திரட்ட முடிவு செய்திருந்தது.
இதையடுத்து, இந்திய
பங்குச்சந்தைகளில்
ஜூலை 14 – 16ம் தேதி வரை
ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு
வெளியீட்டில் முதன்முதலில்
களமிறங்கிறது.

ஒரு பங்கின் விலை
74 – 76 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அதிகபட்ச விலையின்
அடிப்படையில் பங்குகள்
விற்பனை செய்யப்பட்டன.

கொரோனா ஊரடங்கு
காலத்திலும் கடந்த
நிதி ஆண்டு கணிசமாக
லாபம் ஈட்டி இருந்தது.
எனினும், அந்நிறுவனத்துக்கு
கடன் சுமையும் இருந்து
வருகிறது. இதனால்
பொதுப்பங்கு எந்தளவுக்கு
வெற்றி பெறும் என்ற
தடுமாற்றமான நிலை
ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால்,
எதிர்பாராத வகையில்
சொமேட்டோ
பொதுப்பங்குகளுக்கு,
வெளியீட்டை விட
38.25 மடங்குகள் வரை
ஒதுக்கீடு கேட்டு
விண்ணப்பங்கள் குவிந்தன.

கடந்த 13 ஆண்டுகளில்,
பொதுப்பங்கு வெளியீட்டின்
மூலம் 5000 கோடி ரூபாய்க்கு
மேல் திரட்டிய நிறுவனங்களில்
மிக அதிகளவு பங்குகள் கோரி
விண்ணப்பங்கள் குவிந்தது
சொமேட்டோ நிறுவனத்திற்கு
மட்டுமே என பங்குத்தரகு
நிறுவனங்கள் வியப்புடன்
கூறுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட பங்குத்தரகு நிறுவனங்கள் பெரிய அளவில் இந்நிறுவனத்தை சப்போர்ட் செய்திருந்தன. அவற்றிடம் இருந்து மட்டும் 51.79 மடங்கு விண்ணப்பங்களும், அமைப்பு ரீதியற்ற முதலீட்டாளர்களிடம் இருந்து 32.96 மடங்கு விண்ணப்பங்களும், சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து 7.45 மடங்கு விண்ணப்பங்களும் குவிந்தன.

கிரே மார்க்கெட்டிலும் இப்பங்குகளுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், மற்றொரு முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜூபிலன்ட் புட் ஒர்க்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கணிசமான லாபம் ஈட்டி இருந்ததும், சந்தையில் இப்பங்கின் மீது நேர்மறையான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

சந்தை நேர்மறையாக இருக்கும்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய சொமேட்டோ நிறுவனம், வரும் 27ம் தேதி பங்குகளை பட்டியலிட திட்டமிட்டிருந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்கூட்டியே, அதாவது இன்றைய தினமே (ஜூலை 23) பங்குச்சந்தைகளில் பட்டியலிடுகிறது.

முதலீட்டாளர்களிடம்
அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
காரணமாக, இப்பங்கின்
ஆரம்ப விலை 96 – 100 ரூபாய்
என்ற அளவில் இருக்கலாம்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு
குறைந்தபட்சம் 20 முதல் 30
சதவீதம் வரை லாபம்
கிடைக்கும் என்கிறார்கள்
பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

சொமேட்டோ உணவு
விநியோக நிறுவனம்,
முதலீட்டாளர்களுக்கு
பந்தி வைக்குமா அல்லது
வெறும் கையுடன் திருப்பி
அனுப்புமா? என்பது
இன்று தெரியும்.

 

– ஷேர்க்கிங்