திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர்.
காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி.
''பெரியார் பல்கலையில்
முருகக்கடவுள் பேர் கொண்ட
அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி
சில புத்தகங்களை தொகுத்து
வெளியிட்டு இருந்திருக்கிறார்.
அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான்.
இந்த புத்தகம் வெளியிட்டு,
அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட
காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட
வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,''
''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி.
''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி,
முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம்.
அந்த பேராசிரியர்