Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Lord

நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!:  மலேசியாவில் ரஜினி பேச்சு

நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!: மலேசியாவில் ரஜினி பேச்சு

அரசியல், இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டால் நமக்கு எல்லாமே கிடைக்கும் என்று மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நேற்று (ஜனவரி 6, 2017) நட்சத்திரக் கலை விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நடிகர் விவேக், ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விவேக் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் மிக இயல்பாகவும், ஜாலியாகவும் பதில் அளித்தார். எனினும், அவர் கேட்கத் தொடங்குவதற்கு முன்பே, ரொம்ப கடினமான கேள்விகளைத் தவிர்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். விவேக் கேள்விகளும் ரஜினியின் பதில்களும்.... பைரவி டு இந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி? என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல க
ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை 'மியூட்' செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'பரதேசி', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை' என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா - பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது. நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர
‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்து விட்டாரா இல்லையா? என்று இன்னும் காட்சி ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்ப அவரும், 'இன்னும் சமையல் வேலை முடியவில்லை' என்பார்; அல்லது, 'ஓட்டுப் போடும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்' என்பார். இப்படி பூடகமாக பேசுவதும், 'ட்வீட்' போடுவதிலும் கமல் பி.ஹெச்டி., முடித்தவர்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 3) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கமலின் அரசியல் என்ட்ரி உறுதியானது பற்றி தெளிவாக புரிந்திருக்கும். அவர் நடிகர் சக்தியிடம் பேசுகையில், ''இனிமேல் நான் அரசியல்வாதிகளை நக்கல் செய்ய முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,'' என்பார். இப்படி குறியீடுகள் வாயிலாக பேசுவது கமலுக்கே உரித்தானது. அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, அரசியல் நுழைவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகி