Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ground water

பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

பருவமழை: சேலத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பின! பார்த்தாலே பரவசம்; எச்சரிக்கையும் தேவை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் சேலத்தில் மூக்கனேரி, புது ஏரி ஆகியவை முழுமையாக நிரம்பின. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அளவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பரவலாக அதிகரித்திருக்கிறது. ஏரிகள் உள்ளிட்ட கணிசமான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. டிசம்பர் வரை நமக்கு வடகிழக்குப் பருவமழை பெய்ய இருக்கிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இவ்விரு பருவமழைக் காலங்களும், இந்த ஆண்டில் பெரிய அளவில் விவசாயிகளுக்கு துணை புரிந்துள்ளது எனலாம்.   சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 105 ஏரிகள் உள்ளன. தவிர, அந்தந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழும் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பனைமரத்துப்பட்டி ஏரி உள்ள
சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள்
ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்;  செவிகளை மூடிக்கொண்ட  அரசாங்கம்!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்; செவிகளை மூடிக்கொண்ட அரசாங்கம்!!

இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி, முக்கிய செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆனால், நடுவண் மற்றும் மாநில அரசுகள் இவ்விவகாரத்தில், செவிகளையும், கண்களையும் மூடிக்கொண்டு பாராமுகமாக இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை நோக்கி கவனத்தை திருப்பி வருகின்றன. ஆனால், இந்தியாவோ, இந்த மண்ணில் மிச்சமிருக்கும் செல்வங்களையும் சுரண்டுவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, தனிநபர்களின் லாப வெறிக்காக கண்மூடித்தனமாக சுரண்டலை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் அண்மைய தேர்தல் கால முழக்கம் என்பது, வளர்ச்சி அரசியல் பற்றியதுதான். ஆனால், யாருக்கான வளர்ச்சி என்பதுதானே கேள்வி?. மக்கள் நஞ்சருந்தி மாண்டாலும் பரவாயில்லை; தனிப்பெரும் முதலாளிகளுக்கு ஜலதோஷம் பிடித்து விடாமல் காத்து வருகிறது இந்திய அரசு. அது ப
காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள். காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப