Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Cricket

டி-20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா! தீபக் சஹார் ‘ஹாட்ரிக்’ சாதனை!!

டி-20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா! தீபக் சஹார் ‘ஹாட்ரிக்’ சாதனை!!

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
வங்கதேச அணியுடனான ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரை, 2 - 1 கணக்கில் இந்திய அணி வென்றது. இந்தியாவின் தீபக் சஹார், 'ஹாட்ரிக்' விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.   இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று 1-1 என சமநிலையில் இருந்தன. இந்நிலையில், கோப்பையைக் கைப்பற்றப்போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10, 2019) இரவு நடந்தது. இந்திய அணியில், ஆல் ரவுண்டர் குருணால் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக மனீஷ்பாண்டே சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹமதுல்லா, முதலில் பந்து வீச்சை தேர்வ
கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா;  விராட் கோலி அபார சதம்

கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா; விராட் கோலி அபார சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, ஒரு நாள் அரங்கில் 35 சதம் அடித்து அசத்தினார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இந்திய அணி ஏற்கனவே 4-1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ், ஸோண்டோ, இம்ரான் தாக
கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு காரணமாக அந்த அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 205 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே 4 -1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) மாலை தொடங்கி, நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்க
கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…;  ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…; ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (பிப்ரவரி 10, 2018) நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் ஷிகர் தவானின் சதம் வீணானது.  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது. பிங்க் நிற சீருடை: மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தனர். இந்திய அணி வீரர்கள் தங
கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று (பிப்ரவரி 10, 2018) நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 290 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது 100 வது போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர
3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று (பிப்ரவரி 7, 2018) தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கி நிகிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்போட்டியிலும் ரோ
கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, வெற்றிக்கு வழிகோலினார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து, 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் மழ
இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி;  தொடரை வென்றது இந்தியா!

இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது.  இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு
காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!;  இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!; இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் இருந்தவாறே கேலரியில் அமர்ந்திருந்த தன் காதல் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதலில் மட்டையை சுழற்றிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியை தெறிக்கவிட்டனர். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 392 ரன்களை குவித்ததுடன், இலங்கை அணியையும் வீழ்த்தியது. ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, அரை சதத்தை சதமாகவும், சதம் எட்டிவிட்டால் அதை இரட்டை சதம் அல்லது பெரிய அளவிலான ரன்களாகவும் மாற
மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

மொஹாலி கிரிக்கெட்: இலங்கையை நொறுக்கியது இந்தியா!; ரோஹித் இரட்டை சதம்!!

தமிழ்நாடு
மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியை இலங்கை வெறும் 112 ரன்களில் வாரிச்சுருட்டி, அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கும், கேப்டனாக தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியிலும் ரோஹித் ஷர்மா இருந்தார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் ச