Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: body language

அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருக
ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், 'ரஜினி, ஒரு பயந்தாங்கொள்ளி' என்றும், 'விஸ்வரூபம்' படத்த வெளியிட கமல்ஹாஸன் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை, அதிமுக, திமுக, பாஜக செயல்பாடுகள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விஜயகாந்த், தனக்கே உரிய உடல்மொழியில் பதில் அளித்தார். உடல்நலம் தேறி வந்திருக்கும் விஜயகாந்தின் குரல், சில இடங்களில் குளறுவதுபோல் இருந்தது. நடிகர் கமல்ஹாஸன், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே என்று கேட்டபோது, ''அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு...? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்,'' என்று பதில் அளித்தார். கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, ''விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கியபோதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வே