Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஜல்லிக்கட்டு

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ
‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் 'கருப்பன்'. நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம். 'ரேணிகுண்டா' படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் 'கருப்பன்'. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது. அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தா