Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கல்யாணம்

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37).   கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று.   அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   சேலம் மாவட்ட
நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

நெல்லை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்; கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளிப்பு; தொடரும் துயரம்

சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை, கந்துவட்டி கொடுமையால் கைக்குழந்தையுடன் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு 4 வயதில் மதிசரண்யா என்ற மகளும், 2 வயதில் அக்ஷய சரண்யா என்ற பெண் கைக்குழந்தையும் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர். தீ