Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆசிரியர்கள்

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு போதிய கழிப்பறைகள், தண்ணீர், உணவு வசதிகள் செய்து தராமல் ஒவ்வொருமுறையும் தங்களை அரசும், தேர்தல் ஆணையமும் கிள்ளுக்கீரையாக நடத்துவதாக கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. தேர்தல் பணிகளை முடித்துவிட்டுச் செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதோடு ஒரு வாக்காளனின் ஜனநாயக கடமை முடிந்து விடுகிறது. ஆனால், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி அளப்பரியது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் அரசு ஊழியர்கள், அரசு, நி
28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி திடீரென்று காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை அதே பணியிடத்திற்கு அமர்த்தி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சிஇஓ) பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் காக்கா கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.   குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசியல் புள்ளிகள் கொண்டு வரும் சிபாரிசுகளை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளினார். அதேநேரம், தகுதி இருக்கும் பட்சத்தில் அதன்மீது உடனுக்குடன் வி
அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!;  இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!; இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் நேற்று (அக். 11, 2017) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து 15,700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூ