Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 3-0 கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலியின் தலைமைக்கு கிடைத்தை மிகச்சிறந்த வெற்றி இதுவாகும்.  

இந்த தொடரில் இந்தியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி இலங்கையை துவம்சம் செய்ய சில முக்கிய காரணங்கள் உள்ளன. பெரிதாக கஷ்டப்படாமலேயே இந்தியா இந்த இமாலய வெற்றிகளை ருசித்துள்ளது.

அதிலும் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வெளிநாட்டு தொடர் ஒன்றில் அது வொய்ட்வாஷ் செய்தது இதுதான் முதல் முறை என்ற சாதனை மகுடத்தை கேப்டன் விராட் கோஹ்லி சூடிக்கொள்ள சில வீரர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

இந்தியாவில் சிறு தொடரை ஆடி முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்ககா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு இந்த வெற்றி கண்டிப்பாக பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பலாம்.

3வது டெஸ்ட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, கொழும்புவில் நடந்த 2 வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கண்டி பல்லகலே சர்வதேச மைதானத்தில் நடந்தது. அபார வெற்றி இந்த டெஸ்ட் போட்டி இன்றுடன் (14/08/17) முடிவுக்கு வந்தது. இதிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றதன் மூலம், இலங்கை மண்ணில் இந்திய அணி பெற்ற 9வது வெற்றியாக அமைந்தது. இதன்மூலம் இலங்கையில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. அதேபோல, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக முழுமையாக (வொயிட் வாஷ்) வென்றும் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

சாதனை: இதுவரை இந்தியா எந்த ஒரு வெளிநாட்டிலும் 3-0 என்ற கணக்கில் முழுக்க தொடரை கைப்பற்றியது இல்லை. உள்நாட்டில் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தபோதிலும், இது ஒரு குறைபாடாக காணப்பட்டது. ஆனால் இப்போது அந்த குறையும் போக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான வீரர்கள், ஷிகர் தவான், புஜாரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஹர்திக்பாண்ட்யா, கே.எல்.ராகுல், அஸ்வின் ஆகியோர்தான். தொடர் முழுக்க இவர்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் காட்டிய அதிரடிக்கு முன்பு இலங்கை மொத்தமாக சரணடைந்தது. இலங்கை பேட்டிங் சொதப்பலும், பந்து வீச்சின் குறைகளும் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணம்.