Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Author: புதிய அகராதி

டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது. எப்படி பரவுகிறது?: 'ஏடிஸ்' என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3, 4 என்று நான்கு வகைகள் உள்ளன. 3 மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. மரணத்தை ஏற்படுத்தும்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்த
ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒரு கட்டத்தில், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்களாக மாறி விடுவதுதான் காலம் போட்டுக்கொடுத்திருக்கும் பாதை. தன் குடும்பம், குழந்தைகள் என்று வட்டத்திற்குள்ளேயே வாழ்வோருக்கு இது பொருந்தாது. மாறாக, மக்களைப் பற்றிய சிந்தனை யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்களே சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி விடுகின்றனர். சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி , பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். 'இயற்கை பாதுகாப்புக்குழு' அமைப்பின் பொறுப்பாளராக இயங்கி வந்த வளர்மதி, கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டியதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவல் துறையினர
கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…!

கல்வி, கிருஷ்ணகிரி, சேவை, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குக்கிராமங்களில் ஒன்று, பூதொட்டிக்கொட்டாய். இந்த ஊரைச்சேர்ந்த சங்கீதா, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றாள். அடுத்தடுத்து மேல்நிலை வகுப்பு, கல்லூரிக்குச் செல்ல வேண்டியவள், நேராகச்சென்ற இடம் எது தெரியுமா? வயல்வெளி. ஆமாம். தினசரி 60 ரூபாய் கூலிக்கு களைப்பறிக்கச் சென்று வந்தாள். தோழிகள் புத்தகப்பையைச் சுமந்து செல்ல, இவளோ மதிய உணவுக்கான தூக்குச்சட்டியையும், களைக்கொத்தையும் சுமந்து சென்றாள்.   கடும் பொருளாதார நெருக்கடி சங்கீதாவை கூலி வேலைக்குச்செல்லவே நிர்ப்பந்தித்தது. இனி புத்தக வாசனையே கிடைக்காது என்றிருந்த நிலையில், 'ஓசூர் வித்யூ கல்வி, சமூக அறக்கட்டளை'யின் கண்களில் படுகிறாள். அந்த நாள், தன் கனவுகளை நனவாக்கும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவள் வாழ்வு
கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கதிராமங்கலத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எண்ணெய் துரப்பண பணிகள் நடந்து வரும் நிலையில், சமீப காலமாய் என்னதான் ஆச்சு அந்த ஊர் மக்களுக்கு? திடீரென்று அவர்கள் வெகுண்டெழக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதுதான் இப்போதைக்கு எல்லோருடைய மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை தேடும் பயணமாக நாமும் அந்த கிராமத்திற்கு பயணப்பட்டோம். கதிராமங்கலத்திற்கு 2 கி.மீ. தொலைவிலேயே 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் யாரும் ஊருக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது என்றார்கள். காவல்துறையினர் இப்படி என்றால், அந்த கிராம மக்கள் ரொம்பவே உஷாராக இருந்தார்கள். நம்மை முழுவதும் விசாரித்து, நாம் காவல்துறையின் உளவாளிகளோ அல்லது சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே ஊருக்குள் மக்கள் போராடும் இடத்
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கே படிக்க வேண்டும்?: தமிழக அரசு பதில் மனு

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கே படிக்க வேண்டும்?: தமிழக அரசு பதில் மனு

கல்வி, முக்கிய செய்திகள்
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது அவர்களது உரிமை என்றும் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளியில் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கான பதில் மனுவை இன்று (18/08/17) தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்குமாறு ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அரசு ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும். உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான். எனினும், அரசுப்
கல்லீரல் பாதிப்பு: பிரபல நடிகர் மரணம்

கல்லீரல் பாதிப்பு: பிரபல நடிகர் மரணம்

சினிமா, முக்கிய செய்திகள்
கல்லீரல் பாதிப்பால் பிரபல நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு நேற்று (17/08/17) காலமானார். தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்ததை அடுத்து, கடந்த இரு நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று காலமானார். நடிகர் சங்கm சார்பில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர். மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் மு
கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்பட்டால், மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு வரும் கட்டாயத் தேர்ச்சி நடைமுறையானது, அடுத்தக் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கொள்கை முடிவெடுத்துள்ளது. அத்துடன், சர்வதேச தரத்தில் 20 கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. 24 மாநிலங்கள் இதற்கு இசைவும் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால், விளிம்பு நிலை மக்களுடைய பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆசிரியர்கள் தரப்பில் கணிசமான வரவேற்பும் பெற்றுள்ளது. இந்திய அரசு, 'காட்' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே இனி, இந்தியாவில் கல்வி என்பது 100% வணிகமாகிவிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர
பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

அரசியல், முக்கிய செய்திகள்
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி என்ற கொள்கைகளின் நீட்சியாக நாட்டில் இனி ஒரே கட்சிதான் என்கிற சித்தாந்தத்தை நிருவப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்காகவே, தாங்கள் காலூன்றாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளை பிளவு படுத்துவதற்கான சகுனி ஆட்டத்தில் மும்முரமாக காய் நகர்த்துகிறது. ராஜ்யசபையில் அக்கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததால், இத்தகைய கொல்லைப்புற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. அண்மையில், பீஹாரில் நடந்த அரசியல் நகர்வுகள் கொஞ்சம்கூட அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது. ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு தரம் தாழ முடியும் என்பதற்கு தமிழ்நாடுதான் சிறந்த உதாரணம் என்று நினைத்திருந்தோம். அப்படி அல்ல. பீஹார், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. மன்மோகன்சிங் அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே மந்திரியாக இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித
”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்

”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை  ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து கருத்து கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ தான் விசாரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையை ஏற்க முடியாது என்று கூறினார். இதுகுறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, ''கே.பி.முனுசாமி, தமிழ்நாட்டு போலீசாரையோ, ஓய்வுபெற்ற நீதிபதியையோ நம்ப மாட்டாரா? அவருக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமா? ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒருபோதும் இணையவே இணையாது. அதற்கான சாத்தியமே இல்லை,'' என்றார்.
சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.பி.முனுசாமி கூறுகையில், ''ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை ஏற்க முடியாது. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார். காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ''பாஜகவின் தூண்டுதலின்பேரிலும், ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்காகவும்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கருதுகிறேன். வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அந்த சொத்து யாரிடம் இருக்கிறது? அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை,'' என்றார்.