Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Author: புதிய அகராதி

காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

இந்தியா, முக்கிய செய்திகள்
புதுடில்லி : மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு அலையும் இந்தியர்கள் மத்தியில், இந்தியாவுக்கான, அமெரிக்க பெண் தூதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுதந்திர தினமான நேற்று, இந்தியாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, 'டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கா பெண் தூதர் மேரிகே கார்ல்ஸன். இவர், இந்திய கலாசாரத்தில் மிகுந்த பற்று கொண்டவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 'நெட்டிசன்'களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் பட்டு புட
சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் பொறுமை இழந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிங்கத்துடன் மோத வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளை, நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, 'ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா?' என, கேள்வி எழுப்பி இருந்தார் கமல்ஹாசன். மேலும், 'என் இலக்கு, தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே. என் குரலுக்கு வலு சேர்க்க, யாருக்கு துணிச்சல் உள்ளது; இதற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உதவியாக வரலாம். அவர்கள் மழுங்கி போயிருந்தால், வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாத வரை, நாம் இன்னும் அடிமைகளே... புதிய சுதந்திர போராட்டத்திற்கு சூளுரைக்க, துணிவு உள்ளவர்கள் வரலாம்; நிச்சயம் வெல்வோம்,' என்று, பதி
திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: தொண்டையில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (16/07/17) அதிகாலை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி திடீரென்று அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேர ஓய்வுக்கு பின் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். ராசாத்தி , கனிமொழி, தமிழரசு மற்றும் செல
”உறவுகளை இணைக்கும் பாலமாய் இருப்பதே மகிழ்ச்சி” – ஈசன் கார்த்திக் பெருமிதம்

”உறவுகளை இணைக்கும் பாலமாய் இருப்பதே மகிழ்ச்சி” – ஈசன் கார்த்திக் பெருமிதம்

வர்த்தகம், வெற்றி பிறந்த கதை
''கல்யாணமோ காதுகுத்தோ எந்த ஒரு வீட்டு விசேஷம் என்றாலும் மாமன்,மச்சான், அண்ணன்,தம்பி என்று ஒட்டுமொத்த சொந்தபந்தங்களும் களத்தில் இறங்கி, வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு பம்பரமாய் சுழன்றது எல்லாம் அந்தக்காலம். தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், சிதறிக்கிடக்கும் உறவுகளை இணைத்து, வீட்டு விசேஷங்களை சிறப்பாக நடத்திக் கொடுப்பதே என்னைப்போன்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்கள்தான்,'' என தன் தொழில் மீதான பெருமிதத்தை மிடுக்கோடு கூறுகிறார் ஈசன் கார்த்திக். சேலம் பெரமனூர் மெயின் ரோடு, கேப்பிடல் டவர்ஸில் 'யுனிக் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தை நடத்தி வருகிறார், ஈசன் கார்த்திக். ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறையில் இவர் ஒரு நம்பிக்கைக்குரிய வரவு. ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறை தேவை குறித்து விரிவாக பேசலானார்... சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என் ஜீனிலேயே கலந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள், வெற்றி பிறந்த கதை
-வெற்றி பிறந்த கதை-   சேலத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவர்... சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என வெகு சிலரையே சொல்ல முடியும். அந்தப்பட்டியலில் டி.ஜே.ராஜேந்திரன், தவிர்க்க முடியாத ஆளுமை.   மிகச்சமீபத்தில், பழனியில் வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு, மண்டபம் கட்டிக்கொடுத்து, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த அருளாளர். கல்வி உதவி கேட்டு செல்லும் ஏழைகளுக்காக இவருடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றால் மிகை இல்லை.   தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி கட்டடங்களை தனது 'விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்', விஜயஸ்ரீ பில்டர்ஸ், விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனங்களின் மூலம் கட்டிக்கொடுத்து, சேலத்தின் பெயரை பறைசாற்றி வருகிறார். உழைப்பால் உயர்ந்த டி.ஜே.ராஜேந்திரன் அவர்களை, 'வெற்றி பிறந்த கதை' பகுதிக்காக அவருடைய அலுவலகத்தில்
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &
இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை

முக்கிய செய்திகள், விளையாட்டு
சென்னை: டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 3-0 கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலியின் தலைமைக்கு கிடைத்தை மிகச்சிறந்த வெற்றி இதுவாகும்.   இந்த தொடரில் இந்தியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி இலங்கையை துவம்சம் செய்ய சில முக்கிய காரணங்கள் உள்ளன. பெரிதாக கஷ்டப்படாமலேயே இந்தியா இந்த இமாலய வெற்றிகளை ருசித்துள்ளது. அதிலும் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வெளிநாட்டு தொடர் ஒன்றில் அது வொய்ட்வாஷ் செய்தது இதுதான் முதல் முறை என்ற சாதனை மகுடத்தை கேப்டன் விராட் கோஹ்லி சூடிக்கொள்ள சில வீரர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவில் சிறு தொடரை ஆடி முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்ககா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணிக்கு இந்த வெற்றி கண்டிப்பாக பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பலாம். 3வது டெஸ்
பிட்காயின்-இல் முதலீடு செய்வது சரியா..?  ஆபத்து என்னென்ன..?

பிட்காயின்-இல் முதலீடு செய்வது சரியா..? ஆபத்து என்னென்ன..?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பிட்காயின் என்பது டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து பராமரிக்கப்படும் நாணயம் ஆகும். சில நாட்களாகவே செய்திகளில் இடம்பெற்று வரும் இந்த ரகசிய குறியீட்டைக் கொண்ட நாணயமானது, மிகக் குறுகிய வருங்காலத்தில் ஏதேனும் ஒரு வழியில் லாபத்தைப் பெற்று நாணய மதிப்பீட்டை உயர்த்தும் நோக்கில் தங்களிடம் உள்ள உபரிப் பணத்தைத் தாராளமாகச் செலவிடத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிட்காயின்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் சட்டப்பூர்வமாக்குவதை நோக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் அதிகக் கவனத்தை அதன் மீது குவிக்கிறது. இந்த நாணயத்தை மிக அதிக அளவில் அச்சிட முடியாது என்று டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குபவர்களால் சொல்லப்படுவதால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையேயான அதிக இடைவெளியால் டிஜிட்டல் நாணயத்தின் விலை அதி விரைவாக முன்நோக்கி உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம். முதலீட்ட
120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

120 கோடி வசூல்: ‘விவேகம்’ புதிய சாதனை

சினிமா, முக்கிய செய்திகள்
வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அஜித்தின் 'விவேகம்'. ஆனால் அதற்குள்ளாகவே இப்படம் ரூ.120 வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில், இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.54.5 கோடிக்கு சென்றுள்ளது.
மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா?

அரசியல், முக்கிய செய்திகள்
புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை இன்று (ஆக.,14) சந்தித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஓபிஎஸ் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளதால் ஓரிரு நாள்களில் இரு அணிகள் இணைப்பு குறித்த முக்கிய முடிவு வெளியாகலாம் என தெரிகிறது.