Monday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சிசிடிவி கேமரா

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

குற்றம், சேலம், நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டதாலும், சிசிடிவி கேமரா டெக்னீஷியன் அளித்த சாட்சியத்தாலும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் த...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில், குறுக்கு விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சியை யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மிரட்டும் தொனியில் பேசியதற்கு, நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.   தண்டவாளத்தில் சடலமாக... சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தலை வேறு, உடல் வேறாக சடலம் கோகுல்ராஜின் சடலம் கிடந்தது.   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார். தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருக்கமான நட்பில் இருந்த கோகுல்ராஜ், அவரைச் சந்திக்க 23.6.2015ம் தேதி நாமக்கல் சென்றிருந்தார்.   ஆணவக்கொலை: அவர்கள் இருவரும், திர...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது சுவாதியும், கோகுல்ராஜூம்தான் என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதனால் அரசுத்தரப்பினருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.   பொறியியல் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஏழை கூலித் தொழிலாளியான சித்ராவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், கலைச்செல்வன். இளைய மகன், கோகுல்ராஜ் (23).   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார். ஆனாலும், அவ்வப்போது நண்பர்களை பார்க்க கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்படித்தான், 23.6.2015ம் தேதியன்றும் ஓமலூரில் இருந்து கல...