Monday, September 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: turnout

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்...