Wednesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Thoothukudi Sterlite plant

ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்;  செவிகளை மூடிக்கொண்ட  அரசாங்கம்!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்; செவிகளை மூடிக்கொண்ட அரசாங்கம்!!

இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி, முக்கிய செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆனால், நடுவண் மற்றும் மாநில அரசுகள் இவ்விவகாரத்தில், செவிகளையும், கண்களையும் மூடிக்கொண்டு பாராமுகமாக இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை நோக்கி கவனத்தை திருப்பி வருகின்றன. ஆனால், இந்தியாவோ, இந்த மண்ணில் மிச்சமிருக்கும் செல்வங்களையும் சுரண்டுவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, தனிநபர்களின் லாப வெறிக்காக கண்மூடித்தனமாக சுரண்டலை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் அண்மைய தேர்தல் கால முழக்கம் என்பது, வளர்ச்சி அரசியல் பற்றியதுதான். ஆனால், யாருக்கான வளர்ச்சி என்பதுதானே கேள்வி?. மக்கள் நஞ்சருந்தி மாண்டாலும் பரவாயில்லை; தனிப்பெரும் முதலாளிகளுக்கு ஜலதோஷம் பிடித்து விடாமல் காத்து வருகிறது இந்திய அரசு. அது ப...