”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்
ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து கருத்து கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ தான் விசாரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையை ஏற்க முடியாது என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, ''கே.பி.முனுசாமி, தமிழ்நாட்டு போலீசாரையோ, ஓய்வுபெற்ற நீதிபதியையோ நம்ப மாட்டாரா? அவருக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமா? ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒருபோதும் இணையவே இணையாது. அதற்கான சாத்தியமே இல்லை,'' என்றார்....