கவிஞர் சினேகன் மீது தமிழார்வலர்கள் கொதிப்பு
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது யார் என்றுகூட தெரியாமல் இருக்கும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது தமிழார்வர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு கவிஞர் சினேகன்,'தாயுமானவர்' என பதில் அளித்தார். உண்மையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது, பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...' என்று ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். வந்திருக்கிறோம். ஆனால், அந்தப்பாடலை எழுதியது யார் என்று தெரியாமல்தான் பலரும் இருக்கிறோம். தமிழுக்கு நேர்ந்த இன்னொரு கொடுமை, இது.
இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 4ம் தேதி, போட்டியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடினர். அப்போது கவிஞர் சினேகன் சக போட்டியாளரான ஜூலியானாவிடம் இந்தப் பாடலை எழுதியது யார்? என்று கேட...