Wednesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Sudhakaran marriage

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மதுரை செரீனா மீது கஞ்சா வழக்கு, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மீது போதைப்பொருள் வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா மட்டுமே இருப்பது போலவும், ஜெயலலிதாவுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' செய்தி வெளியிட்டுள்ளது, மன்னார்குடி கும்பல் வட்டாரத்தை கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, ஆளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது புரட்சித்தலைவி அம்மா' தொடங்கப்பட்டது. நேற்று வெளியான (மார்ச் 2, 2018) இந்த நாளிதழில், ''இதுவே என் கட்டளை.... கட்டளையே என் சாசனம்'' என்ற தலைப்பில் மிக நீளமான கவிதை ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் அந்தக் கவிதை எழுத்தப்பட்டு இருந்தது. அந்த கவிதை இடம்பெற்ற பக்கத்தின் மேல் பகுத...