திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்
''இந்த வருஷம் வெயில் புரட்டி எடுக்கும்னு பேசிக்கிறாங்களே அப்படியா?,'' என்று ஏற்கனவே வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்திருந்த பேனாக்காரரைப் பார்த்துக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தார் பொய்யாமொழியார்.
''வானிலை அறிக்கையை விடுங்க… தமிழ்நாட்டு தேர்தல் களம் வரலாறு காணாத வகையில இந்தமுறை ரொம்பவே கனல் தெறிக்கப் போகுது பாருங்க,'' என்று நேரடியாகவே சங்கதிக்கு வந்தார் பேனாக்காரர்.
இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த நக்கல் நல்லசாமி, ''தமிழ்நாடு அரசியல் களம் இருக்கட்டும். மாங்கனி மாவட்ட கள நிலவரத்தைச் சொல்லுங்க,'' என்றார்.
''சமீபத்துல மாங்கனி மாவட்டத்தில் கடாரம் கொண்டான் அமைச்சரின் உள்ளடி வேலைகள் குறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த கூட்டத்துல எதிர்க்கட்சி கவுன்சிலர் அந்த பத்திரிகையை கையில் ஏந்தியபடி அமைச்சரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறித்து ஏதோ பே...




