Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: romance

இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

மருத்துவம், முக்கிய செய்திகள்
இந்தியா போன்ற புராதன நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடுகளில் காதல், திருமணம், குழந்தைப்பேறு, கலவி குறித்த சங்கதிகள் யாவுமே அளவுக்கு அதிகமாகவே புனிதமாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புனிமாக்கும் போக்கு, ஒருவேளை சமூகத்தில் குற்றங்கள் பெருகி விடும் என்ற அச்சத்தினாலோ அல்லது அறியாமையினலோகூட இருக்கலாம். சொல்லப்போனால் அத்தகைய உணர்வுகள் புனிதங்களே அல்ல.   ஆனால் ஆண், பெண் உடலியலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை பதின்பருவ சிறுவர், சிறுமிகளுக்கு கற்பிக்காமலே வந்திருப்பது ஆகப்பெரும் சமூகக் குற்றமாகத்தான் பார்க்கிறேன். அப்படியான ஒரு சங்கதி பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.   நடிகர் தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை'யில், ஒரு காட்சியில் 'தலைவாசல்' விஜய், ''இந்த பசங்க பாத்ரூமுக்குள் போய் அப்படி ரொம்ப நேரமா என்னதான் பண்ணுவானுங்களோ...?'' என்று சலிப்புடன் கூறுவார். எல்லோருமே பதின்பருவக
திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒன்றே முக்கால் அடியில் உலகையே அளந்த வள்ளுவன்தான், காதலின் உச்சமும் ஆழமும் தொட்டவன் என்றால் மிகையாகாது. 1330 பாக்களில், 250 பாடல்களே காமத்துப்பாலில் இடம் பெற்றிருந்தாலும், வள்ளுவனின் உச்சபட்ச கற்பனை வளத்தை அதில்தான் காண முடியும் என்பது என் கருத்து.   மாந்தர்களிடையே காதல் பூக்கும் தருணம், காதலர்களுக்குள் ஏற்படும் ஊடல், பின் கூடல் ஆகிய உணர்வுகளை மிக நுட்பமாக, உளவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதி இருப்பானோ என்றுகூட தோன்றுகிறது. காதலுக்கு வள்ளுவன் வகுத்தளித்த கோட்பாடுகள் இன்றும் மாறவே இல்லை. உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.   இப்போதுபோல், சங்க காலத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பார்களா? எனத்தெரியாது. ஆனாலும், அவன் காலத்திலும் சமூகத்தை சீரழிக்கக் கூடியதாகத்தான் மதுபானம் இருந்திருக்கிறது என்பதை 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தின் மூலம் அறியலாம்.