Saturday, December 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: revolutionary Fidel Castro

கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கியூபா தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. இறந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1, 2018) அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவி மிர்தா டயஸ்&பாலார்ட். அவருக்குப் பிறந்த ஒரே மகன்தான், இப்போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டியஸ்-பாலார்ட். இவர், 'ஃபிடலிட்டோ' என்றும் அந்நாட்டு மக்கள் அழைத்து வந்தனர். ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். கியூபாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'கிரான்மா', ''கடந்த பல மாதங்கங்...