Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Rangarajan

”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், வர்த்தகம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் கூறினார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அதிரடியாக குண்டை தூக்கிப் போட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இது அபாயகரமான நடவடிக்கை என்று அப்போதே எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரித்தனர். அகலமான மார்பை விரித்துப் பேசும் நரேந்திர மோடி இதையெல்லாம் கேட்பாரா?. நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத கும்பலுக்கு கள்ளத்தனமாக பணம் போய்ச்சேர்வதைத் தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களை செல்லாததாக்குகிறோம் என்றார். சில நாள்கள் கழித்து, கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும்தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட