Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: rainy season

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களே அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று அருண் நகர், ராஜராஜன் நகர் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வந்தாலும் வந்தது, சேலம் மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. என்னதான் சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக நிலை உயர்த்தப்பட்டாலும், நகர் ஊரமைப்பு பொறியியலில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறது எனலாம்.   சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சாலைகள்; கால்வாய்கள், ஒழிக்கவே முடியாத கொசுத்தொல்லை, அவற்றால் உண்டாகும் காய்ச்சல் என அவலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது, மாம்பழ மாநகராட்சி. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி பெய்து வரு
ஒழுகும் பேருந்துகள்; கிழிக்கும் தகடுகள்!

ஒழுகும் பேருந்துகள்; கிழிக்கும் தகடுகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள், வேலூர்
தமிழக அரசுப்பேருந்துகள், மழைக்காலங்களில் கிட்டத்தட்ட நடமாடும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாறி விடுகின்றன. மழையில் நனைந்தும், கிழிக்கும் தகடுகளுடனும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் அவல நிலை தொடர்கிறது. தமிழகத்தில் தனியார் வசமிருந்த போக்குவரத்து சேவை, 1972ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது. இப்போது 8 கோட்டங்கள், 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2016-17 கணக்கெடுப்பின்படி, 23078 பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் நம்பி இருக்கும் ஒரே பொதுப் போக்குவரத்து சாதனம், அரசுப் பேருந்துகள்தான். எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூல், சராசரி வேகத்திற்கு மேல் செல்லாதது, தனியார் பேருந்துகளில் உள்ளதுபோல் டிவி, ரேடியோ மற்றும் சுத்தமான இருக்கை வச