Monday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Q Branch

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை,  மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவராக சித்தரித்து, உளவுத்துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்கும் மூன்றாம்தர வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது அரசியல் அரங்கில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து 'டிப்-டாப்' ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்க...
”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் ஆயுதப் புரட்சி வெடிப்பதற்கான சூழல் உருவாகும் என்று 'இந்திய கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட்' கட்சியின் முக்கிய தளபதியான விவேக் கூறினார்.   மாவோயிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் சிபிஐ - மாவோயிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான விவேக் என்கிற விவேக் மாவோயிஸ்ட், தான் எழுதி வரும் நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பு பணிகளுக்காக கடந்த மாதம் (ஆகஸ்ட்) சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். தகவல் அறிந்து நாமும் அவர் தங்கியிருந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  ராஜலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.   அது ஒரு மழை நாள் இரவு. கியூ பிராஞ்ச் மற்றும் உள்ளூர் காவல்துறை என பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சாதாரண உடையில், அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். நாம் சென்றதையும் மோப்பம் பிடித்துவிட்ட உளவுத்த...