Tuesday, December 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: provide modern facilities like Smart Class

வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
''வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் உச்சம் தொடுவார்கள்'' தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராமப் பள்ளிக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால், கல்வியில் உச்சம் தொடுவார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கல்லுக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே 20 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள். மலைக்கிராமங்களில் குறிப்பாக பழங்குடியினர் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றவே விருப்ப முன்னுரிமை தெரிவிக்காத இந்த நாளில், பழங்குடியின குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வாசிப்புப் பயிற்சி அளித்து வருகிறார், ஆசிரியர் நடராஜன். அவரை சந்திப்பதற்காக நாம் கல்லுக்கட்டு அரசுப்பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம். பள்ளி வேலை தொடர்பாக அ...