Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: police summon

ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஆத்தூரில், சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்த கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காவல்துறை சம்மன் அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர தட்டிகளை வைத்துள்ளன.   இதனால் மரங்களின் ஆயுள் குறைவதுடன், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அக்னி செல்வம், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் கேசவன், அதற்குரிய சிஎஸ்ஆர் ரசீது கொடுத்தார். மேலும், 'இந்த புகாரின...