கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”
-மகளிர் தின ஸ்பெஷல்-
''இந்த உலகத்துல
நாம பயன்படுத்திய பிறகு
தூக்கி எறியப்படும் காகிதம்,
தகரம், உடுத்தின பிறகு
வீசப்படும் துணிமணிகள்னு
எல்லாமே மறுசுழற்சி மூலமாக
திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல
பயன்பாட்டுக்கு வந்துடுது.
அதனால இங்கே வேஸ்ட்னு
எதுவுமே இல்ல.
செத்ததுக்கப்புறம் எரித்து
சாம்பலாகிடற மனுஷங்கள
வேணும்னா வேஸ்ட்னு
சொல்லலாம்,'' என போகிற
போக்கில் வாழ்க்கையின்
ஆகப்பெரும் தத்துவத்தை
சொல்கிறார் மலர்மணி (37).
கொடிய வறுமையும்,
அனுபவங்கள் கற்றுக்கொடுத்த
பாடமும்தான் அவரை இந்தளவுக்கு
பக்குவமாக பேச வைத்திருக்கிறது.
வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான்
ஒருவரின் சிந்தனையும் அமைகிறது.
அதற்கு மலர்மணியும்
விதிவிலக்கு அன்று.
அவர் எதற்காக
பழைய காகிதம், பழைய இரும்பை
உதாரணமாகக் கூறினார்
என்பதற்குக் காரணங்கள்
இல்லாமல் இல்லை.
சேலம் மாவட்ட...