இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார்.
சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38.
எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார்.
நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார்.
அதன்பின் அவர் தொட...