Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Minister Jayakumar

”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது ஆறு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று ட்வீட் செய்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சரஸ்வதி, கலைராஜன் உள்ளிட்டோர் நேற்று திடீரென்று நீக்கப்பட்டனர். இது தொடர்பாக துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி, ''இந்த பலவீனமான நபர்கள், ஆறு மாதம் கழித்துதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள்.