Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Karunanidhi is now in the absence

நீடிக்குமா இந்த ஆட்சி?

நீடிக்குமா இந்த ஆட்சி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக ஆளும் அதிமுகவுக்குள் உச்சக்கட்ட பூசல்கள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சிக்குள் நிகழும் சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, இந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் இருக்குமா என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழாமல் இல்லை. ஜெ., மரணத்தின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காததன் பின்னணி என்ன?. இதெல்லாம், ஜெ., ஆளுமையை நேசிக்கும் வெகுஜன மக்களின் மனதில் படிந்திருக்கும் கேள்விகள். அதன் காரணமாகவே சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு இருக்கிறது. அதேநேரம், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அதிமுகவை, 'எல்லா விதத்திலும்' வழிநடத்தும் 'சக்தி' மன்னார்குடி கும்பலுக்கு இருக்கிறது என்பதையும் ம...