Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Johannesburg

முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார். ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமா...
கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…;  ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

கிரிக்கெட்: இந்திய பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா கிழி… கிழி… கிழி…; ஷிகர் தவான் சாதனை சதம் வீண்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (பிப்ரவரி 10, 2018) நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் ஷிகர் தவானின் சதம் வீணானது.  தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது. பிங்க் நிற சீருடை: மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்திலும் ஏராளமான ரசிகர்கள் பிங்க் நிற உடை அணிந்து வந்திருந்தனர். இந்திய அணி வீரர்கள் தங...
கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு; ஷிகர் தவான் சாதனை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று (பிப்ரவரி 10, 2018) நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 290 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது 100 வது போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இன்றைய போட்டியில் தங்களது வழக்கமான பச்சை நிற சீருடையை தவிர்த்து, பிங்க் நிற சீருடையில் களம் புகுந்தனர். போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பெர்க்கின் வாண்டரர...