சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!
அதிமுக ஆட்சியில் நேர்மையான
அரசு ஊழியர்கள் தொடர்ந்து
பந்தாடப்பட்டு வருவது,
உயர் அதிகாரிகள் மத்தியில்
கடும் அதிருப்தியையும்,
மனச்சோர்வையும்
ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியின்போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவதும் மிகச்சாதாரணமான ஒன்றுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சரவையில் பெரிதாக மாற்றங்கள் நிகழாவிட்டாலும், நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் இப்போதும் தொடர்கிறது.
ஊழல் கறை படியாதவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி...