5வது ஒருநாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை; மிரட்டும் விராட் கோலி படை
தென்னாப்பிரிக்கா உடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இத்துடன் 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 25 ஆண்டுகால தொடர் தோல்வி என்ற சோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று (பிப்ரவரி 13, 2018) நடந்தது.
ரோஹித் ஷர்மா சதம்:
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ராம், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் ஷர்ம...