பள்ளிக் கல்வித்துறை செயலர் இடமாற்றம் தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: பள்ளி கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பள்ளிக்கல்வி துறையில் சமீபத்தில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு காரணமானவராக திகழ்ந்தவர் உதயச்சந்திரன். இதில் 10 ம்வகுப்பு, பிளஸ் டூ தேர்வு ஆகியவற்றில் முதல் 3 இடங்கள் அறிவிப்பு வராது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ம் வகுப்பு பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு:
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இவரை இடமாற்றம் செய்யக்கூடாது என கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த ஐகோர்ட் இவரையும், புதிய பாடத்திட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள ...