இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்; ரயில்வே திட்டம்
ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த ஒருவர், தவிர்க்க இயலாத நிலையில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், அந்த டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக்கொள்ளும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவில் அமல்படுத்த உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வரும் ரயில்வே, காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தி வருகிறது. ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது என்பது இதுவரை குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அதை நிர்வாகமே அனுமதிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.
இவ்வாறு மாற்றித்தரப்படும் டிக்கெட்டுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரே ஒப்புதல் வழங்கலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூடுதலாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் திட்டமிட்டபடி பயணம் செய்ய இயலாமல்,