அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!
நீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்பு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை.
தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி ...