ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் சசிகலா குடும்பத்தினர், மருத்துவர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் ...