Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: fans do not have to pay for ajith’s cut- outs

ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரஜினி, அஜித்திற்கு சமூக அக்கறையே இல்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பால் உற்பத்தியில் இந்தியா முன்னணிக்கு வந்துவிட்டாலும், இன்னும் அனைத்து மக்களுக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. 20 விழுக்காடு வளரிளம் பெண் குழந்தைளுக்கு பாலில் உள்ள கால்சியம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்கிறது ஓர் ஆய்வு.   அதேபோல் வயதான, கர்ப்பிணி பெண்களுக்கும் கால்சியம் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் போதிய அளவுக்கு பால் அல்லது பால் பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை என்கிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்திலோ சினிமா ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான போக்கு இன்றும் நிலவுகிறது. இது போன்ற செயல்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்...