Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Eight Lane Road project

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தவித பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஜருகுமலையில் மண் பரிசோதனை பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   பாரத்மாலா பரியோஜனா   சேலம் முதல் சென்னை வரை புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின்கீழ், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள இந்த சாலைப்பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த சாலை முடிகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம...